என் கனவில் ஒரு அழகிய பொன் நகரம்
நிராம்பி வழியா
பேருந்துகளும் ..!
பாக்கி சில்லறைகள் கொடுக்கும்
உண்மை நடத்துனர்களும்....!
கொலை கற்பழிப்பு இல்லா
திரைப் படங்களும் ...!
உடல் முழுதும் ஆடை அணிந்து
நடிக்கும் நடிக தாரகைகளும்...!
அன்போடு பகிர்ந்துண்ணும்
அன்பு மனித காக்கை கிளிகளும்...!
கைசுத்தம் வேண்டி
லஞ்சம் ஊழல் இல்லாத
பெருந்தன்மை அதிகாரிகளும்...!
வரதட்சணை வாங்காத
மாப்பிள்ளை வீட்டார்களும்...!
பிச்சைக்காரர்களில்லா
கோயில்களும் தெருக்களும்...!
குப்பைகளில்லா சந்தும் தெருக்களும்
சுத்தமான சாக்கடைகளும் சாலைகளும்...!
குடிசைகளில்லா அழகிய நகரமும்
கண்டேன்...! எங்கே ?
ஓ! அது என் கனவில் தானோ ?