வாலி வாலிதான்
வாலி எனும் ஞானி
காவியத்தின் தலைவன் நீ
தமிழின் ஏணி
உன் பாடலில் தேனெடுக்கும் தேனீ
வயதான பொழுதும் வாலிபனானாய்
உனக்கினை யாரும் இல்லை எனும்படி
பேரெடுத்து போனாய்
வாலி வாலிதான்
படைப்பிலும்,
கவியிலும்,
நடையிலும்.
கோபத்திலும்.
நீ நீயாய் இருந்தாய்
அதனால் தான்
அகிலம் முழுவதும்
கவிதையால் நடந்தாய்...