உதட்டு சாயம்
காலை தென்றல் அதன்
ஈரமான காற்றின்
இனிமையான ஸ்பரிசம்
என் இமைகளை திறக்க
இமைகளோ...
நிலவிடம் மோகம் கொண்ட மேகங்களாய்
மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாய் அணைத்துக்கொள்ள
ஆர்பரித்து வந்த உன் நினைவுகள்
கண்களோடு கலக்கங்களை தர . . .
கனவுகளை கலைத்து
கருவிழி கசக்கி எழுந்தேன்
தென்றலென தீண்டியது நீ என புரிந்தேன்
கண்ணாடியில் முகம் பார்த்தபோது...
என் கன்னத்தில் உன் உதட்டுசாயம்