நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது - அமர்தியா சென்..! ஏன் இவ்வாறு சொல்கிறார்..!
நரேந்திர மோடி தான் பிரதமர் என்பது பாஜக வில் உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக வுக்குள்ளே ஒரு பிரிவினரும், நாட்டின் சமூக ஆர்வலர்கள், மத நல்லினக்கவாதிகள், பொருளாதார அறிஞர்கள் என்று பல தளங்களிலும் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகின்றன என்றால் மிகையில்லை.
நேற்று முன்தினம் தான் எழுதிய புத்தகம் ஒன்றின் முதல் பிரதியை
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெற்றுக் கொண்ட நிகழ்வுக்குப் பிறகே இந்த கருத்துக்களை வெளியிட்டார். அதாவது ஒரு பாதுகாப்பு இல்லை என்றால் இந்நேரம இந்த சங் பரிவார் கும்பல் அவர் வீட்டின் முன் திரண்டு ரவுடித் தனங்களிலும் காலித் தனங்களிலும் ஈடுபட்டு இருப்பார்கள்..!
முன்பு காஷ்மீர் பற்றி கருத்து கூறிய இந்தியாவின் அழகிய மங்கை அருந்ததி ராய் அவர்கள் வீட்டின் முன்னால் காசு வாங்கிக் கொண்டு கூலிக்கு மாரடிக்கும் இந்த காவிக் கும்பல், அவரின் வீட்டில் கற்களை
கொண்டு எரிந்தும் கூச்சல் போட்டும் ரவுடித்தனம் செய்தது நினைவில் இருக்கலாம்....!
நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞரான அமர்தியா சென் கடுமையாக எதிர்த்து உள்ளார் மோடி பிரதமர் ஆவதை...!
அவர் இன்று அளித்த பேட்டியில், மத நல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரதமராக ஏற்க முடியும்..? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவர் பிரதமராவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்
சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என உணரும் வகையில் அவர் எதையுமே செய்யவில்லை.
சிறுபான்மையினருக்கு மட்டும் என்றல்ல. நான் சிறுபான்மையில் ஒருவன் கிடையாது..( சிறுபான்மையினர் என்றால்... இவரே அச்சம் கொள்ளும் அளவிற்கு இவர்களின் ரவுடித்தனம் இருந்திருக்கிறது...) பெரும்பான்மை மக்களுக்கும் கூட அவர் என்ன செய்து விட்டார்..? 2002 - ல் அவர் செய்தது திட்டமிட்ட வன்முறை. மோடியை அங்கீகரிப்பதன் மூலம் அந்த வன்முறைக்கு சட்ட அங்கீகாரம் தரப்போகிறார்கள் என்று தான் அர்த்தம்..
இந்திய பிரதமராக விரும்பும் எந்த இந்திய குடிமகனுக்கும் இல்லாத பயங்கரமான வன்முறை பின்னணி மோடிக்கு உளது. அவரை ஏற்கக் கூடாது.
குஜராத்தில் சில உள் கட்டமைப்புகள் நன்றாக இருக்கலாம். ஆனால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அந்த மாநிலம் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய உள்ளது.
சகிப்புத் தன்மையில் நீண்ட பராம்பரியம் கொண்ட இந்தியாவில், சிறு பான்மையினருக்கு பாதுகாப்பான நிலை உள்ளது என பெரும்பான்மை மக்கள் எண்ணுமளவுக்கு மோடி நடந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
ஆக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இவற்றின் துணை அமைப்புகள் அனைத்தும் பணங்களை மூட்டை மூட்டை யாக அல்ல..பெரிய பெரிய குடோன்களில் குவித்து வைத்துள்ளார்கள்...எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும்..அல்லது இந்தியாவின் ஒரே எதிர்க் கட்சி என்று இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்...
இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக உள்ளனர் என்றால் யாராவது இல்லையென்று மறுக்க முடியுமா என்ன..?
சங்கிலிக்கருப்பு