பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அடிப்படைவாத மதவாத சக்திகளின் பஸ் உடைப்புப் போராட்டம் சொல்வது என்ன..?
தமிழகத்தில் சனிக்கிழமை அன்று பாஜகவின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார்.. தமிழக அரசும் உடனே சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் துரிதமாக இறங்கியுள்ளன....
இந்நிலையில் திங்கள் கிழமை பந்தும், சனிக்கிழமை திருப்பூரில் பந்தும் ஏன் நடத்தினார்கள் இந்து மத அடிப்படைவாதிகள் .?
யாரை எதிர்த்து இந்த பந்த்..? கண்டிப்பாக தமிழக அரசை எதிர்த்து அல்ல..மத்திய அரசை எதிர்த்து...அதுவும் இல்லை...பிறகு எதற்கு இந்த பந்த்..?
சமீப காலங்களாக பாஜக வினர் அரசியல் செய்வதற்கு எந்த காரணமும் இல்லாமல் தவித்துப் போயிருந்த நேரத்தில் தான் இந்த படுகொலை சம்பவம் இவர்களுக்கு கிடைக்க, களம் புகுந்தார்கள்...பேரூந்துகளை உடைப்பதற்கு...
அப்படியே மதக் கலவரத்தை தூண்ட முடியுமா என்று பார்த்தார்கள்...
தமிழக அரசின் முதல்வர் பிரதமர் வேட்பாளாராக வேறு இருக்கிறார்...மோடியின் நட்பு சக்தியாக வேறு இருக்கிறார்.. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் போராட்டம் கடையடைப்பு மறியல் பஸ்உடைப்பு என்று ஆன மட்டும் பொதுமக்களை உண்டு இல்லை என்று அரசியல் செய்து விட்டார்கள்...!
தமிழக அரசும் இந்த மத அடிப்படைவாதிகளுக்கு, அதாவது ஒரு நூறு பேருக்கு ஏ, பி மற்றும் ஒய் பிரிவுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை கொடுத்துள்ளது...
கலவரம் செய்து போராட்டம் நடத்துபவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் ஒரே அரசும் தமிழ் நாடு அரசுதான் இந்தியாவிலேயே...என்று கருதலாமா..?
படுகொலை செய்யப்பட்ட மத அடிப்படைவாதிகள் பெரும்பாலும் நில அபகரிப்பு, கந்து வட்டி, ரியல் எஸ்டேட் மோசடி மற்றும் ஏனைய அணைத்து தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டவர்கள் என்று போலீஸ் குற்றப்பத்திரிக்கை சொல்கிறது...!
தமிழக போலீஸ் பெயரளவிற்கு கைதும் பேச்சு வார்த்தையும் நடத்தியது..ஏன்..? இவர்கள் தேசிய காட்சிகளில் எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள்...
திராவிட கட்சிகள் அனைத்தும் வாயை இறுக மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்...
இடது சாரிகள் என்று அவர்களாகவே சொல்லிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இந்த படுகொலைக்கு கண்டனத்தை சொல்லி விட்டு, பஸ் உடைப்பு மற்றும் பந்த் அட்டகாசத்திற்கு தங்களது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்கள்...!
தமிழ் நாட்டில் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தும் எந்த அரசியல் கட்சியும் இல்லாத காரணத்தால் இந்திய தேசிய வெறியை உயர்த்திப் பிடிப்பவர்களும் இவர்களுக்கு மாற்றாக இந்து மதவெறியை உயர்த்திப் பிடிப்பவர்களும் ஒய்யாரமாக தாழம்பு கொண்டையுடன் பவனி வருகிறார்கள்...என்று கருதலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
சங்கிலிக்கருப்பு