காதல் – எனது பார்வையில்
எனக்குள் ஏற்பட்ட
கருத்து மாற்றத்தை
பதிவு செய்ய
ஆசைப்படுகிறேன்
என் சிறு வயதில்
காதல் தவரென்று
காதில் ஓதப்பட்டது
என் பள்ளியில் கூட
ஆணும் பெண்ணும்
பேச தடையுண்டு
திரையில் நாயகன்
நாயகி முத்தமிடுகையில்
கைகளால் கண்களை
மூடிய நினைவிண்டு
காலப் போக்கில்
கருத்து மாறி விட்டது
காதல் அசிங்கம்
என்று தோற்றம்
தந்தது என்னுடைய
கல்லூரிப் பருவத்தில்
canteenlum hostelum
நான் பார்த்த காதல்
காமம் நிறைந்தது
பேச்சின் சத்தத்தை விட,
முத்தத்தின் ஓசையே
கேட்க முடிந்தது.
வெறி கொண்ட முத்தத்தில்
நெறி கொண்ட காதல் இல்லை
சில காதலர்களின்
கரு கலைப்பும் இதை
உறுதி செய்தது
வாழ்க்கைச் சக்கரம்
சுழன்றது, இன்று
என் கருத்தும்
மாறி இருந்தது
காதல் தவறில்லை
அது செய்யும் விதத்தில்
மாற்றம் தேவை
புதரில் புரியும்
காமம், காதலில்லை
மறைத்து செய்ய
காதல், களவுமில்லை
எனக்குள் ஏன்
இந்த திடீர்
மாற்றம், இது
அறிவின் வளர்ச்சியா
வயதின் முதிர்ச்சியா
தெரியவில்லை
இதை படித்தபின்,
எனை நோக்கி
ஒரு குற்றச்சாட்டு
எழுவதை உணர்கிறேன்
அது, நான் காதல்
செய்கிறேன் என்று
நிச்சயம் இல்லை,
ஆனால் கண்டிப்பாக
ஊரறிய, நானும்
ஒரு நாள் காதல்
செய்வேன் என்
மனைவியுடன் !