எப்படி முடிகிறது உன்னால்!!!
என்னை தேவதை
என்பாய் ; நான்
வரம் அளித்ததில்லை
ஒரு நாளும்
Missed call விடுவாய் ,
கேட்டால் என்னை
Miss பண்ணுகிறேன் என்பாய்
நான் தூங்கும் வரை
பேசுவாய் என்னிடம் ,
எனக்கு விடியும் வரை
தொடரும் உன் பேச்சு
என் புகைபடத்திடம்,
பூக்களை வெறுப்பாய்,
கேட்டால் என் வாசம்
பூவிற்கும் இல்லை என்பாய்
எனக்காக மட்டுமே
வாழ்கிறாய், நீ தொலைந்து
ஆகி விட்டது பல நாள்,
நான் வாழ்வது இரு உருவில்
என் ஆசைகள் எல்லாம் உன் வடிவில்
என் நிழலும் இருளில்
தொலைந்து போகும், என்றும்
என்னை தொடர்ந்து வரும்
பாதச் சுவடுகளாக நீ
எப்படி முடிகிறது உன்னால்!!!