தாயுமானவள் (ஒரு தந்தையின் உணர்வுகள்)

பூந்தடாகத்தில் மலர்ந்த பூவே
வளர்ச்சியின் பரிணாமம் வர்ணம் அல்ல
மணம்தான்...
நான் உணர்ந்தது மலரில் அல்ல ....
மணமாகப் போகும் உன் முகத்தில் தான்..!!
உன் வளர்ச்சியின் முடிவு நம் பிரிவு...!!!
உன்னால் என்னை முழுமையாக
நேசிக்க முடியாது ....!!!
என்னெனில் இனி உன் வாழ்நாட்கள்
என்னுடன் இல்லை ....!!!
அனால் நீ நேசித்த முதல் "ஆண்"
எனும் கர்வம் என்னுள் உள்ளதடி...!!

காலனை சந்திக்க நேர்ந்தால் கையூட்டு -கொடுத்திருப்பேன்
உன் பணியை எங்கள் இருவருக்கு மட்டும்
செய்யாதே என்று...!!!!

என் குருதியின் அளவை அதிகரிக்க
இறைனிடம் வேண்டினேன் ....!!உன்னை
"மறு"வீடு அனுப்பும் அன்று
உன் கண்களில் மறுமுறை கண்ணீரை கண்டேன்
உன் கண்களில் நீர்த்துளி சிந்தினால்
என் உடலில் குருதி வற்றுமடி....!!!
வனிதையே உன்னை பிரிகையில்
மறு "தாயை " இழந்த துயரை அடைந்தேனடி..!!!

எழுதியவர் : ஹரிணி M (26-Jul-13, 1:25 am)
Tanglish : thayumanaval
பார்வை : 110

மேலே