பயணம்....

அதோ...!
ஓர் பாதை தெரிகிறது-அதன்
மேனி எங்கும்
கல்லும்,முள்ளும்
வியாபித்துக் கிடக்கிறது...

முள் தைத்ததால்...,
அதற்கு சகாயம்தேட
மூளை கசக்கினேன்....!

கல் தைத்ததால்..,
அதை களைந்து நடக்க
கர்வம் கொண்டேன்....!

பாதை எங்கும்
நறுமண மலர்களும்,
நச்சுப் பாம்புகளும்...!

நாசி துழைக்க
நறுமண மலர்களை
முகர்ந்து வந்தேன்...!

நம்பிக்கை பிறக்க
நச்சுப் பாம்புகளை
கடந்து வந்தேன்....!

எழுதியவர் : மீனாட்சி.பாபு (26-Jul-13, 1:13 am)
பார்வை : 87

மேலே