என் நண்பன் நீ தான்டா

கைகோர்த்த நாட்களை விட,
உன்னிடம் சண்டை போட்ட நாட்களே அதிகம்...
ஆனாலும்,
உன்னிடம் மட்டும்தான் உண்மையான சந்தோசத்தை பெறுகிறேன்
நம் உள்ளங்கள் வேறு வேறு இடத்தில் இருந்தாலும்,
அதில் தோன்றும் உணர்வுகள் ஒன்றான இரு விழிகள்தான்..
நான் சிரிக்கையில் ஏளனம் செய்ய தெரிந்த உனக்கு,
நான் அழுகின்ற வேலையில்,
மறைக்கும் உன் சோகங்கள்,
வளர்க்கும் தாய் உணர்வுள்..,
கட்டி அனைத்து தலாட்ட வில்லை என்றாலும்,
தட்டி கொடுத்து வாடா என்றும் சொல்லும் வார்த்தைகள் என்னவென்று சொல்வது..!
உன்னிடம் இருந்த ஒவ்வொரு நொடிகளும் விளை மதிப்பற்றது...
ஆயிரம் நண்பர்கள் என் கண்முன்னே நின்றாலும்,
உன்னை போல் ஒரு நண்பன் மட்டும்தான் என் இதயத்தில் வாழ்கிறான்...!
அவன் வயதே இல்லாதவன்...,
என் நரைமுடி விழுந்தாலும்...,
அவன் நினைவு நொடி விழாது...!
என்றென்றும் என் நண்பன் நீ தான்டா...!!
வாடா...!!!