நீ அருகில் இல்லாததால் ...

நாட்களும் நகர மறுக்கின்றன...
இரவும், பகலும் எதுவென்றே புலப்படவில்லை ..
நிஜங்களும் பொய்யாய் தெரிகிறது ...
பசிக்கவும் மறுக்கிறது வயிற்றுக்கு ,வாயினில் பட்டதெல்லாம் கசக்கிறது ..,
தென்றலின் காற்றுகூட தீயாய் தெரிகிறது ...
இதயத்தின் துடிப்போசைகூட இடியோசையாய் காதில் விழுகிறது ...
என் நிழல்கூட பின்னால் வரமறுக்கிறது,
தெரிந்தவர்களை நோக்கும்பொழுது கூட போலியான புன்னகையே வெளிப்படுகிறது..
ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் அனாதையாய் திரிகின்றேன் ....
நரகத்தின் பிடிதனிலே சிக்கிகொண்டதைப்போல் போல் உணர்கின்றேன்,
ஏனெனில் இவையாவும் , நீ அருகில் இல்லாததால்...புரிந்துகொள்வாயா..?