நாமும் அப்படியா

பெற்றோர்களை முன் வைத்து வாழ்க்கை
நம் வாழ்வு முறையும் அப்படியா ?

அவர்களின் சிறு செயலையாவது நாம்
இனியும் சிறப்பாக செய்ய முடியுமா ?

முடிந்தால் அதை செய்து விட்டு நீயும்
இனி முறையாக நின்று பெருமை பேசு

கொடுத்து விட்டு குறை சொல்லுவது ஏன் ?
இன்னும் அடிமையாக இருக்க எண்ணாதே

உறவுகளை ஒதுக்க நினைத்தால் – நீயே
ஒரு நாள் ஒதுக்கப்படுவாய் தெரிந்து கொள்

ஒரு சார்பாக எப்போதும் பேசாதே –இதில்
உண்மை மறைக்கப்பட்டிருக்கும் வருந்தாதே

பிறர் குறைகளை ஆராய்வதை இனி நிறுத்து
உன் செயல்களை இன்னும் முறை படுத்து

கோபத்தை குறைத்து கொள்ள பாரு – இதை
பிறர் மீது காட்டுவது அது முறையாகாது

நாம் ஒருவரை அணுகும் முறைதான்- அது
அவர்கள் நம்முடன் இணைந்து வரும் வழி

பொறாமை கொள்வதை நிறுத்து - இது
உன் பெருந்தன்மை நிலையை உயர்த்தும்

உறவோடு உரிமை கொள்ள உறுதி ஏடு
சிறப்பாகும் உன் செயலும் இறுதி வரை

நிலை இல்லா உலக வாழ்வில் நம் செயல்
மறை வழியில் வாழ்ந்தால் நிறைவு பெறும்

-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (28-Jul-13, 2:44 pm)
Tanglish : naamum appadiyaa
பார்வை : 77

மேலே