நம்பிக் கை வை.

நம்பிக்கை வை.
நம்பிக்க் கை வை.
முயற்சிதான் நம்பிக்கை.
முயன்று பெறு வெற்றியை..

முடியுமெனத் துணிந்திடு.
முன்னேற முடிவெடு.
அடிபதித்து நின்றிடு.
ஆகாயம் எட்டும்.தொடு.

தோற்காத செயலுமில்லை.
தொலையாத பொருளுமில்லை.
தோல்வியும் இழப்பும்போல்
துணை செய்யும் நண்பனில்லை..

ஆரம்பித்துத் தொடரும் முன்னே
ஆராய்ந்ந்து முடிவெடு.
அது தொடரும் நாளும் பின்னே.
ஐயந்தெளிந்து மீளும் தன்னே.

திட்டமிட்டுச் செய்வதெலாம்
தீர்க்ககமாகும் உறுதியாகும்..
வட்டமிட்டு வாழ்வதெலாம்
வளர்ந்திட உதவாதாம்.

முயற்சியே பயிற்சியாகும்.
முடியாதததும் ஏதாகும்.
அயற்சியும் தொலைவாகும்.
ஆவதெலாம் மலையாகும்.

உன்னையே முன்னை வை!
உழைப்பிலே கண்ணை வை!
அன்னை உன்னை நம்பிய
தன்னம்பிக்கை தன்னை வை!

எட்டாதது ஏதுமில்லை.
கிட்டாத தூரமில்லை.
தொட்டுத் தொட்டு முன்னேற
ஒட்ட ஒட்டத் தானே வரும்.

ஆரம்பம் சரியானால்.
அது சுழலும் முறையானால்.
ஊர் வம்பு தேடாமல்
உன் வழியே தொடர்ந்து செல்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ,பெ.பி.அய்யா. (28-Jul-13, 2:37 pm)
பார்வை : 186

மேலே