வறுமை

மானுட வாழ்வியலில்
மணற் புழுதிகளாய் படிந்து
பரம ஏழைகளை பந்தாடும்
பாட்டாளி வர்க்கத்தை துண்டாடும்
பண முதலைகளின் புகழ்ப்பாடி
தினம் நூறு கொண்டாட்டம் !

படித்திருந்தும் மதிப்பில்லை
பணமிருந்தால் அது உண்டு!
பாட்டாளியைக் கண்டாலே
பாசாங்குச் செய்கின்ற
நாட்டாமைகள் உள்ளவரை
நடுத் தெருவில் திண்டாட்டம் !

குழித் தோண்டி புதைக்கும்
குள்ளநரி கூட்டங்கள்
பழி தீர்க்கும் எண்ணத்தில்
பாவங்களை ஏவி விட்டு
ஊழி ஆட்டம் போட்டதாய்
ஊருக்குள்ளே கொக்கரிக்கும்!


ஏற்றத்தாழ்வின் மூக்கை உடைக்க
சிறு காக்கைக்கும் உரிமை உண்டு
என்று எண்ணமிட்டு எழுதுகிறபோது
வெறும் வார்த்தைகளுக்கா பஞ்சம்?

வானம் பொத்து ஊத்துகின்ற
வான் மழைப்போல்;காலநேரமின்றி
வார்த்தைகள் வந்து விழுவதை
வரி ஏய்ப்பா செய்யமுடியும் ?

வறுமை என்ற கரையைப்போக்க
வாழ்க்கையோடு போராட்டம் - தினம்
நடத்தும் மனிதர் உழைப்பைச் சுரண்டி
ஊதி கொழுக்குது ஒரு கூட்டம்!

வாழ்நாள் முழுதும் வருந்தி வருந்தியே
பாரம் சுமக்குது பெருங் கூட்டம் – அவ்
வரியவர் வாழ்வை உயர்த்தும் நோக்கில்
தீட்ட வேண்டும் தொலைநோக்கு திட்டம்!


ஒருநாள் பொழுதை கழிப்பதே, ஏழைகளூக்கு
ஓராண்டு போலாகும்! மறுநாள் பொழுது
விடிவதற்குள் கடன் தொல்லை கழுத்திறுக்கும்
வட்டிக்குத் தந்தவனின் விரல்கள் சொடுக்கும் !

வாங்கியவனுக்கு ஏமாற்றவேண்டுமென்ற எண்ணம் சிறுதுளியும்மில்லை,
வைத்திருப்பதையும் கொடுத்துவிட்டால் அன்றவன் வயிற்றுக்குவுணவில்லை;
வசதியிருந்தால் கொடுத்திடுவானென்று கொடுத்தவன் காத்திடல்வேண்டும்
வசதியிருந்தும் கொடுக்கலையென்றால் வாங்கியவனை காரிஉமியவேண்டும்

உழைத்தவனின் ஊதியத்தை அவன்வியர்வை உலருமுன்கொடு ! என்றார் ‘நபிகள்நாயகம்’. உழைப்புக்காண மரியாதையை உதட்டு வார்த்தையிலிருந்து வெளிக்காட்டாமல் உனது நடத்தையிலிருந்து வெளிக்காட்டென்பதே வெளிப்படையான யதார்த்த ஜனநாயகம்.

எழுதியவர் : இரா.மணிமாறன், கைபேசி : (28-Jul-13, 8:52 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 71

மேலே