ழ-கர கவி
ழ-கர கவி
ஆழிவித்து அதழ்கள் ஞெகிழ
சுழிக்காற்றும் உழற்சியும் சுழிக்க
கற்புழையின் நூழையை
நாவுழலை வழிவழி வழிபார்த்தால்
ழைத்தலுடன் பனிமொழியும்
ஆழிமெம்முரசோனிடம் இதழ்விள்ள
எழிலாய் நற்றமிழால் மொழிந்து
மதிமாழாக்க தழிஞ்சி நிகழ
நீராழிமண்டபத்தில் வழிபார்த்து
வழிவழி விழித்திருந்தாளே
==== க.பிரபு தமிழன்
எம் தோழர்களே எனுடைய மிக நீண்ட நாள் கணவு தான் இக்கவி – அதாவது “ழ”கரம் கொண்டு கவி எழுத வேண்டுமென (என் மனைவியை நினைத்து தனிமையிலிருந்த நேரத்தில் இக்கவியை எழுதினேன்)