உடன்பிறவா "அண்ணன்" அவர்களுக்கு சமர்ப்பணம்!!!

அறியா வயதில்
பாதி இரவில் அனாதையாக்கப்படும்
தலையணைகளுக்கு
போட்ட
சண்டைகள் இரவுகள் !

இல்லாதப் பேய்க்காக நாம் பயந்து
நடுநடுங்கிய பல இரவுகள்!
தூக்கத்தில் நான் நனைத்த
போர்வைகளுக்கு
நீ வாங்கிய திட்டுக்கள்!!

தூக்கத்தில் நான்
வாய்க்கும் காதுக்கும்
கட்டிமுடித்த எச்சில்
பாலத்தை கிண்டல் செய்த தருணங்கள் !!

குளிப்பதற்கு நான் நடத்தும்
போராட்டங்களுக்கு என்னை
பிடித்து கொடுத்து முடித்து
வைத்த சாதனைகள்!!!

கைகளில் கட்டிவிட்டக்
காகித "வாட்ச்"களுக்கு இணையாக
கால்களிலும் நான் கேட்டு அடம்பிடித்த
என் குறும்புகள்!!

வலிக்காத அடிக்கு அப்பாவிடம்
மாட்டிவிட்ட உன் சிணுங்கல்கள்
வயதுவந்த பின்னும் என்னை
தொட்டு பேசி விளையாடும்
உன் உரிமையின் கர்வங்கள் !!!

இவைக்கெல்லாம் சொந்தக்காரன்
என் அண்ணன்
என் உடன் பிறக்கவில்லை!!
உடன் பிறவாமை கீறிய காயங்களுக்கு
மருந்தாய் கிடைத்தது
ஒரு உடன் பிறவா பொக்கிஷம்
அண்ணன் என்ற வடிவில்
கிடைத்தது அறிவு வந்தப்பின்!!

அன்பு ஒரு ஜீவநதியோ?
அதே
என் அண்ணன் பார்வையோ ?
சிறு சிறு முல்லை பூவினை
மிஞ்சிடும் அன்பு அன்னையே
அண்ணனே !!
புன்னகை தவிழ்ந்திடும்
உன் பார்வையில்!!!

அண்ணா என்ற வார்த்தையில்
தானே என் சுவாசம்
அண்ணா உன் அன்பில் தானே
மகிழ்ந்திடும் என் உள்ளம்!!!

அண்ணன் தங்கை உறவாகும்
அது
ஜென்ம ஜென்மத்தின் வரமாகும்
இந்த புதிய உறவினில் மூழ்கி
தழைத்திட என்ன பாக்கியம்
நான் செய்தேனோ????

உடன்பிறவா "அண்ணன்" அவர்களுக்கு சமர்ப்பணம்!!!

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (30-Jul-13, 5:13 pm)
பார்வை : 34083

மேலே