என் மழையோடு கொஞ்சம்..!
என் மழையோடு கொஞ்சம்..!
மண் வாசம்
நுகர்ந்த பொழுதில்,
நானும் கொஞ்சம் மயங்கினேன்..!
மழை துளி கண்ட பிறகு
சொர்க்கம்தனை தழுவினேன்..!
நீ தூறும்,
அழகு கண்டு
குதித்து நானும் தாவினேன்..!
உன் சாரல் பட்ட பின்பு
சிலிர்த்து சிலை போல் ஆகினேன்..!
உன்னோடு நானும் கரைய
கண்மூடி நிற்கின்றேன்..!
மழை சாரல்,
மறையும் பொழுதில் !
மனம் பதறி நிற்கின்றேன்..!
உன்னோடு,
என்னை கூட்டி செல்ல
மண்டியிட்டு தொழுகின்றேன்..!
உன் துளி, எல்லாம் எடுத்து
கவிதையாய் கோர்கின்றேன்..!
லட்ச கவிதை நொடியில் எழுதி,
நீ விழும் அழகை ரசிக்கின்றேன்..!
ஒற்றை துளி,
என் கண்ணில் விழவும்,
கவிதை எல்லாம் மறக்கின்றேன்..!
உன்னை பற்றி இன்னும் எழுத
சொற்களின்றி தவிக்கின்றேன்..!
உன்னை மீண்டும்
காணும் நாளை,
எதிர்பார்த்து கொண்டே இருக்கின்றேன்..!
-இன்னும் நனைவேன்..
நிஷாந்தினி.k