............அவள் தன்மை..........

புரியாத சொற்றொடர்கள்,
வசப்படாத கற்பனைகள்,
நிகழயியலாத சிந்தனைகள்,
தெவிட்டாத தெள்ளியதமிழ்,
என்று உயிர் உருக்கி,
நீ தந்த கடிதத்தைவிட !
அவசரமாய் வாங்கி,
நீ அதனுடன் இணைத்திருந்த,
ஒற்றை ரோஜா அத்தனை அழகு !
பேசாமல் அதைமட்டும் கொடு தினமும் !
கூசாமல் மகிழ்ந்து பழகுவேன் உன்னுடன் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Jul-13, 6:58 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 192

மேலே