பத்திரிகைகள் ஒரு பார்வை.....!
சில வருடங்களுக்கு முன்னால் வரை குமுதம் வேறு நிர்வாகத்தில் இருந்தது . இப்போ குமுதத்தின் முகமும் மாறி விட்டது ... நிறமும் காவி ஆகி விட்டது .
ஏகதேசம் எல்லா வாரமிருமுறை மற்றும் வார இதழ்களின் நிதர்சனமான யோக்கியதை இது. சொந்தப் பிரச்சினை , பணம், ஜாதி, மதம் போன்றவைகளின் பின்னணியில்தான் இந்த பத்திரிகைகள் செயல்படுகின்றன.
நக்கீரன் திமுக ஆதரவு இதழ் என்றாலும் முஸ்லிம்கள் என்றால் அதற்கு எட்டிக்காய். இதுபோலத்தான் சிவந்தி ஆதித்தன் இருக்கும்போதே ஒன்றிரண்டு காவிகளின் விளையாட்டு தந்தியில் இருந்தது. அவர் மறைவிற்குப் பிறகு தந்தியும் தடுமாற ஆரம்பித்து விட்டது.
இத்தனைக்கும் தினமலம் பிடிக்காதவர்கள் தந்தி வாங்கினார்கள். அதிலும் இப்போ வெறுப்பு செய்தி வருகிறது. மற்றொன்று தினகரன். அய்யா கே.பி. கந்தசாமி இருக்கும்
வரை கஷ்டத்திலும் நஷ்டத்திலும் கண்ணியத்தோடு நடுநிலையோடு பத்திரிக்கை வந்தது. அது கழுதைகளின் கைகளுக்குப் போன பிறகு கொலைகாரன் புகழ் பாடுகிறது.
ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், உரிமைக்காகப் போராடும் போராளிகள், உயிரைக் காக்கப் போராடும்
( கூடங்குளம் ) மக்கள் என அடிமட்ட மக்களுக்கு எதிராகவே இது செய்தி வெளியிடுகிறது.
மற்றும் தினமணியின் போக்கு எப்போது எப்படி மாறும் என்று சொல்ல முடியாத மனநிலை மாறுபட்ட நிலையில் வருகிறது.
மாலை பத்திரிகைகள் பெரும்பாலும் பாலியல் செய்திகளுக்கே கண் சிமிட்டுகின்றன. இப்படி எந்த நாளிதழும் நல்ல செய்திகளை தர விரும்பவில்லை.
பணம் கொடுப்பவனுக்கு பாய் விரிக்கும் பரத்தைகளின் போக்குத்தான் காணப்படுகிறது. அதனால் ... முஸ்லிம்கள் இந்த பத்திரிகைச் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து வாங்குவது நல்லது.
நன்றி
அபு ஹாசிமா
எனக்கென்னமோ அபு கூறுவதை ஏற்றுக் முடியவில்லை....
இன்று அனைத்துப் பத்திரிக்கைகளுமே ( அணைத்து மீடியாக்களுமே ) நடுநிலையாளர்களுக்கு / சமூக சீர்திருத்தவாதிகளுக்கு உகந்ததாக இல்லை....
அவர்கள் உண்மையான செய்திக்கும் பல அறிவான தேடல்களுக்கும் இணையங்களை தான் நாட
வேண்டியுள்ளது...நாடும் அரசும் காவியை கையில் எடுத்து பல பத்து வருடங்கள் ஆகிவிட்டன...இன்று காவிமயம் லட்சக்கணக்கான அப்பாவி உயிர்களை வேட்டை ஆடுவதற்கு தயாராக உள்ளன...
இந்த உயிர்ப்பலிகள் தான் இருக்கின்ற / இருக்கப்போகின்ற பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்று கார்ப்பரேட்களை தனது தோளில் தூக்கி சுமக்கும் அரசு கூறுகிறது....!
சங்கிலிக்கருப்பு