சொல்ல மறந்த ஒன்று

கேட்ட அனைத்தையும் காணாமல் கடந்த நிமிடங்கள் எண்ணிலடங்கா சந்தோஷங்களை உள்ளடக்கியது என்பதை கூட காலம் கடந்த பின்பே உணர்ந்தது மனம்.
உணர்வுபூர்வமான அனைத்தையும் தொலைத்த ஏக்கம் சொல்ல முடியாத வலிகளுடன் முட்டி மோதிக் கொள்கிறது... மனதினுள்!
ஏறிட்டுப் பார்த்து ஏற்றுக் கொள்ள முடியாத தருணங்களை இன்று முழுவதுமாய் மனம் ஏற்றுக் கொள்கிறது நினைத்து பார்க்க அழகான தருணம் கிடைத்து விட்டது என்று!
காலத்தின் பரிசாக, மனதார ஏற்காமல் உதறிய தருணங்கள் தந்த வலிகளை மனம் உவந்து இப்போது ஏற்றுக் கொள்கிறேன்... !!
வலியோ, சந்தோஷமோ இத்தனிமையுடன் முடிந்து போகட்டும். ஆனால், இறுதியாக ஒன்று மட்டும் சொல்லி கடந்து விடுகிறேன்..
சொல்ல மறந்த ஒன்று...
மன்னித்து விடு!