சொல்லாமல் வரும் நோய்

“நோயற்ற வாழ்வே
குறையற்ற செல்வம்”
இது பழமொழி !
ஆனால் தலைவிதி ?

வயது வித்தியாசம்
பாராமல் வருகின்ற
பல நோய்களை;
வென்றெடுப்ப தென்பது
நரக வேதனையானது!

“நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”

வள்ளூவா !
உன் கூற்றுப்படி நடந்தாலும்
உடலில் ஊற்றெடுக்கும்
நோய்கள் ஏராளம் !


இறைவா !
வியாதிகள் என்பது
உயிர்கள் பிறக்கும் போதே
உன்னிடம் வாங்கிவந்த வரமா ?

வயது வித்தியாச மில்லாமல்
வருகின்ற நோய்களை
விரைவில் குணப்படுத்தச் சொல்லி
மருத்துவரை அனுகும் போதுதான்
இன்னாருக்கு இன்ன வியாதியென
எல்லோருக்கும் தெரிய வருகிறது !

செல்வம் படைத்தவன்
‘அப்போலோ’ முதல்
‘அமெரிக்கா’வரை செல்கிறான்,
கஞ்சிக்கே டிங்கி அடிப்பவனுக்கு..
எப்போதுமே அரசாங்கம்தான் !

அப்போலோவில் வாங்கப்படும்
அட்மிஸன் பீஸ்-சைக் காட்டிலும்
அரசாங்க ஆஸ்பத்திரியில் வாங்கப்படும் டிப்ஸ்
அப்போலோவின்
அட்மிஸன் பீஸ்-சையே மிஞ்சிவிடும்!
அப்போதுதான்
ஆன்மா நினைக்கும், அடச் சீ....
இதற்கு
அப்போலோவே பெட்டர் என்று !
என்ன செய்வது
வந்தாகி விட்டது,
பணியாளனை பகைத்துக் கொண்டால்
பிணி தீராதே.. !

எழுதியவர் : (2-Aug-13, 12:08 pm)
பார்வை : 73

மேலே