பெண் சிசு

தெய்வமே எனக்கு ஏன்
இந்த தண்டனை..?

இருளிலே நிலை மறந்து
இருவர் செய்த குற்றமா..?

இல்லையேல் கருவிலே
பெண் சிசுவாய் நான்
உருவான குற்றமா..?

ஆயுதத்தால் என்னை
கிள்ளியெறிந்தது ஒரு காலம்

இன்றோ எனக்கு
உருவம் கிடைக்குமுன்னே
கருவிலேயே முடிகிறது
என் காலம்

தெய்வமே அடுத்த ஜென்மத்திலாவது
நல்ல தாய் தந்தையர் மடியில்
தவழ்ந்து விளையாடும்
பாக்கியம் எனக்குத் தர வேண்டி

அதற்காய்...
இதோ என் உயிர்
இன்றே சமர்ப்பணம்.

எழுதியவர் : சங்கை முத்து (2-Aug-13, 11:23 am)
பார்வை : 52

மேலே