பிரிவு

இருக்கும் வரை புரியப் போவதில்லை.. இதை விட அழகான‌ நிமிடங்கள் திரும்ப கிடைக்க போவதில்லை என்று!!

தொலைத்தப்பின்பு என்றோ ஒரு நாள் நலம் விசாரிப்பு. அதுவும் அந்த நினைவு உள்ளபோது மட்டுமே.. இதுதான் வாழ்க்கை.

இந்த நிஜத்தை உணராமல் வைத்த பாசம்,நட்பு கண்ணீருடன் கலங்கி நிற்கிறது.. ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புடன்!!

சந்திக்கும் போதே பிரிவு எழுதப்பட்டு விட்டாலும் எதிர்பார்ப்புகளை கற்பனையில் கூட ஏமாற்றி பார்க்க விருப்பம் இல்லை!!

இந்த பிரிவின் சோலையில் என்றாவது தென்றல் காற்று வீசும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாட்களையும் எண்ணிக் கொண்டு இருக்கிறேன்... விடியும் பொழுது எனக்காகி விடாதா என்று!!

எழுதியவர் : மலர் (2-Aug-13, 5:25 pm)
Tanglish : pirivu
பார்வை : 262

மேலே