இப்படியும் கிடைக்கும்..!
காத்திருந்தேன்
கால் கடுக்க
நல்ல நண்பன்
கிடைக்கவில்லை..!
கடைதெருவில்
கால் வைத்ததும்
கிடைத்தான்
ஒரு நல்ல எதிரி..!
"டாஸ் மார்க்" கின்
புண்ணியத்தால்..
போதையில் சரிய
நானும் விலக
கீழே விழுந்தவன்
பழியென் மீது போட
நண்பர்கள் தினத்தில்
ஒரு எதிரி கிடைத்தான்
"டாஸ்மார்க்" கை
தொடாததால் என்னை
பழி தீர்த்து கொண்டது..!