ஆறாவது பூதம்
எனக்கு அவனும்
அவனுக்கு நானும்
நிழலான நிஜம் !!
பத்து மாதம் தாய்
பள்ளிவரை தந்தை இவனும்
ஆயுட்கால உயிர்த்தாங்கி !!
ஓர் உடை சிறு அறை
எச்சில் தட்டின்
பொதுவுடமைப் பறவைகள்
இனம் மதம் மொழி
சாதி எல்லை எதுவுமற்ற
ஆறாவது பூதம்
காதலிக்கு முன்பே
கனவில் தோன்றும்
உடன்பிறவாக் காதலன்
தன்னில் பாதி
தந்தால் தெய்வம் !!
தன்னையே தருவது நட்பு !!
நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்