நண்பர்கள் தின மடல்

எனக்காக விட்டுக் கொடுப்பவனும் என் நண்பன்...
என்றைக்கும் யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுக்காதவனும்
என் நண்பன்..!
பேசாமல் இருப்பான் என்னிடம்... என்னை
பெருமை படுத்துவான் என் உள்ளத்திடம்..!
கூட்டம் கூட்டமாய் உட்காருவோம்...
கூலி வேளை செய்தாலும் நண்பனை உயர்த்த நினைப்போம்..!
விளையாட்டில் எதிரியாக நினைப்பதில்லை...
விண்ணைத் தாண்டி சென்றாலும் என்
நண்பனை மறப்பதில்லை..!