நட்பே அனைத்துறவாய் ....

கூடிக் கொட்டமளிக்கும்
தேடிவந்து கைகோர்க்கும்
சிரித்தே மகிழ வைக்கும்....
மகிழ்ச்சியெல்லாம் பகிர்ந்தளிக்கும்
உறவதுவை என்ன சொல்ல??
நட்பதுவே அனைத்துறவாய்.....

துயர் வரும் வேளையிலே
தோள் கொடுத்து தாங்கிக் கொண்டே
தமையனாய் ஒரு நேரம்....

வாழ்க்கை சறுக்களிலே விழும் நேரம்
கரம் கொடுத்து தூக்கும் வேளை
தந்தையாய் ஒரு நேரம்.....

துன்பங்கள் சூழ்கையிலே
உதிர்க்கும் கண்ணீர் துடைத்தே
தாயைப் போல் ஒரு நேரம்....

இடர்வரும் வேளையிலே
அறிவுரை வழங்கி இடர் விலக்கி
ஆலோசகராய் ஒரு நேரம்....

பயிலும் கல்வி கூடத்திலே
சந்தேகங்கள் தீர்த்து வைத்தே
ஆசானாய் ஒரு நேரம்....

உடல் பிணியில் வாடுகையில்
உடனிருந்து பேணுதலில்
செவிலியறாய் ஒரு நேரம்...

ஓட்டாண்டியாய் போனால்
உற்றார் உறவும் ஒதுக்கும்
உற்ற நட்போ உயிரும் காக்கும்...

உறவின் பரிமாணங்களில்
நட்பினும் உயர்ந்த உறவுண்டோ??
உண்டென்று நவில்வோர் யாரோ??

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்
சொ. சாந்தி

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எழுதியவர் : சொ. சாந்தி (4-Aug-13, 5:07 pm)
பார்வை : 508

மேலே