*விடைதேடி வீதியெங்கும்*

வேதமென்று சொல்லும் போது
வேட்கை இங்கே கிளம்புது
===நாதம் ஒன்று கேட்கையிலே
===நாடி நரம்பு ஒடுங்குது
பாதம் தேடி பணியும் போது
பாவி நம்மை தெரியுது
பூதமாகி போகும் போது
பூக்கள் கூட மடியுது
===சேதமான நெஞ்சம் கூட
===சேர்ந்துவர துடிக்குது
பாகமான எண்ணமெல்லாம்
பகுத்தறிவா மாறுது
நீதி கேட்ட நெஞ்சமெல்லாம்
நெருப்பாத்தா போசுங்குது
===தேடிவந்த தெய்வங்கூட
===தெருவுக்குத்தா ஆனது
கோடி எல்லாம் சேர்த்துங்கூட
கூடியழ யாருமில்லை
பரிதவிச்சு கேட்ட கதைய
பாரெல்லாம் சிரிக்குது
===ஊடுசெய்யும் வித்தையெல்லாம்
===ஏட்டோட நிக்குது
ஊருக்காக வாழ்ந்தவனும்
உணர்விழந்து நடக்குறான்
கூடிசெஞ்ச கூத்தெல்லாம்
கேடுகெட்டு போனது
===நாடிதொழும் நாதியற்று
===வீதிதேடி அலையுது
விதி என்று விட்டுசெல்லும்
சதி உன்ன தொடருது
சாக்காடு சேருமுன்னே
நோக்காடு நிக்குது
===களைக்கொல்லி இங்கேதான்
===உயிர்கொல்லி ஆனது
நாடிங்கே நோஞ்சானாய்
விடைதேடி அலையுது
நானென்ன நீயென்ன
நலம்மென்று கேட்டுக் கொண்டு
===நாடிவரும் நட்பைக்கூட
===கைகொடுத்து விலக்குது
சேர்ந்து வாழும் எண்ணத்திற்கு
விலங்கொன்று மாட்டினோம்
சேதாரமானத்திற்கு இப்போ
செய்கூலி கேட்க்கிறோம்
===சொன்னவனும் நானில்லை
===சொல்லி கெட்டவனும் அவனில்லை
சோகக்கதை சொந்தகதை
சுதந்திரத்தை சுரண்டுது ...