இயற்கையின் அழகிலே....
ஆடும் அலைகள்
சோலைக் குயில்கள்
நீல வெளியில் ஜாலம்
காட்டும் வான வர்ணம்
கோல விழிக்கு அழகு சேர்க்கும்
மயிலின் நடனம்
ம்ம்ம்ம்ம்
இசை பாட குயிலினம்
இணைந்தாட மயிலினம்
தாளம் தட்டி மேளம் போடும்
இடியோடு மின்னலும்
இயற்கையின் ஆனந்த கூத்தை
இரசித்திடாத மானிடனே..
பொருளோடும் புகளோடும்
உன்னுடைய போராட்டம்
கண்களை திறந்து
இயற்கையை உணர்ந்து
களித்திடு மகிழ்ந்து......