ஒரு பயணம் வந்தேன் இயேசய்யா ..

ஒரு பயணம் வந்தேன் இயேசய்யா - அந்த
பயணத்தில் உமை நான் கண்டடைந்தேன்
கெய்ரோவில் இறங்கி நயல்நதியில் பயணம்
சென்று மகிழ்ந்தேன் இயேசய்யா
* * * * * * * * * * * ** * ( ஒரு பயணம்...
பிரமித்தேன் பிரமித்தேன்
பிரமிடுகளைக் கண்டு பிரமித்தேன்
கண்டடைந்தேன் கண்டடைந்தேன்
இயேசு மரி சூசை இல்லம் சென்றடைந்தேன்
சீனாய் மலையின் உச்சிதனை நுகர்ந்து
தாபவைக் கடந்து இஸ்ரையலை நோக்கி வந்தேன்
*************************** (ஒரு பயணம் ...
ஜெருசலேம் ! பெத்லகேம்
கொல்கொதா தொலோரோசா சென்றேனே - உம்
பாதம் பட்ட இடங்களைப் பார்த்துப் பார்த்து
ரசித்து - என் காயம் பட்ட மனதினை ஆற்றினேன்
* * * * ** * * * * * * * * * * ( ஒரு பயணம் ...
ஒலிவ மலை சியோன் மலை
கார்மேல் மலை தாபோமலை
கல்வாரி சோதனை மலை சென்றேனே
எரிகோ பெத்தானியா
சாக்டல் கும்ரின் குகை சென்றேனே
நாசரேத் கானா செசாரியா சென்றேனே
பேதுருவின் பீடம் சென்றேன்
பேதுருவின் மீனை உண்டேன்
இஸ்ரேயல் பயணம் இனிதாய் அமைந்தது
நேபோ மலை நோக்கி சென்றேனே
யோர்தான் நதியில் திருமுழுக்கு புதுப்பிதேனே
* * * * * * * * * * * * ( ஒரு பயணம் ..