காத்து இருக்கிறேன் உன் வருகைக்காய் ....

மண்ணில் பிறந்து விட்டால் .
சோதனைகளும் வேதனைகளும்,
எம்மை விரட்டி பிடிப்பதுண்டு .

ஆனாலும் எனக்கென்று ஒர் இதயமுண்டு .
அதில் அன்பான மனசிருந்தும்
புரிந்து கொள்வோர் யாருமில்லை .

இதயம் வலிப்பதை உணர்கிறேன் .
என்னன்பை எப்படியோ பொய்யாய்
களவாடி விட்டு இன்னொரு பெண்ணின்
இதயத்தினுள் ஒளிந்து கொண்டாய் ...

பெற்றோரின் அன்பும் கிடைக்கவில்லை
காதலை என்னுள் தந்து அன்பெனும்
கபட நாடகம் பல ஆடி விட்டு.
என்னை விழிபிதுங்க விட்டு சென்றவனே ...

உன் அன்பை நான் ரசிக்க ஆரம்பித்தேன்
அது புதை மணலென தெரியாமல்
இன்று அதனால்தான் சுலபமாய் சிக்கி
கண்ணீர் கடலில் விழுந்து விட்டேன் .


உன் வருகைக்காய் காத்திருந்தேன் பல வருடம் .
நீயோ கல்நெஞ்சாய் இருக்கிறாய் இன்னும்
எனைக்காண அடிக்கடி ஓடி வருபவனே...
இன்றென்னிதயம் அழுகிறது நீ வரவில்லையென்று ..

என் வீட்டு தரைக்கு தெரியும்
என் கண்ணீர் துளி பட்டு ஈரமானதால்
நீ வரமாட்டாயென்று தெரிந்தும் காத்திருக்கின்றேன்...
எதிர்காலம் நோக்கி உன்னன்பான காதலுக்காக....

எழுதியவர் : (5-Aug-13, 10:38 pm)
பார்வை : 104

மேலே