காதல் தோல்வியின் வலி .............

உன் சுட்டெரிக்கும்
வார்த்தைகள் !
பாறையில் பட்டுதேரிக்கும்
தோட்டாவை போல்!!
வெட்டிகிளித்தது
என் நெஞ்சத்தை !!!
ஓர் பார்வை ஒன்று நீ
பார்த்திருந்தால்!
என்னையே நான் எரித்திரிப்பேன்
உனக்காக!!
விட்டுவிடு என
நீ கூறி இருந்தால் !
என் உயிரையும் உனக்காக
விட்டு இருப்பேன் !!
கல்லாய் இருந்த என்
மனதை கரைத்தது !
காற்றில் கரையாதிருக்கும்
உன் நினைவுகளே !!
கரையை காதலித்து தோற்ற அலைகளை
கண்டு என் கண்ணில் நீர் வழிந்தது!!
அப்போதும் பெண்ணே நம்
நினைவுகள் தான் என் நெஞ்சில்!!
சுவாசிக்காமல் இரு என்றாலும்
இருப்பனே தவிர ,
உன்னை நேசிக்காமல் இருந்தால் என் நெஞ்சம்
துடிப்பதை நிறுத்தி விடும்,
நான் சுவாசிக்கும் மூச்சும் என் பேச்சும்
என்றும் உன் நினைவுடன் தான்!!!

எழுதியவர் : வ. ரூபேஷ் பாபு (5-Aug-13, 10:56 pm)
பார்வை : 66

மேலே