ஓவியமாய் இருந்தாலும் ஒய்யாரம்

ஓவியமாய் இருந்தாலும் ஒய்யாரம்
காவியமாய் வாழ்ந்திட்ட கன்னியோ !
ஓய்வெடுக்கும் நங்கையோ நளினம்
ஒருபுறமாய் நோக்கிடும் பளிங்கினம் !
மங்கையவள் மயங்கிடும் நிலையில்
மனதில் யாரோ அவள் நினைவில் !
மயக்கும் புன்னகை பொன்நகையாய்
மயக்கிய மன்மதன் மனக்குகையில் !
அருகில் உள்ள அருமைத் தோழியோ
உருகி மருகிடும் மனதை அறிந்தவள் !
சொல்லத் துடிக்கும் அவள் நிலையோ
வல்லவன் வடிக்கும் தங்கச் சிலையே !
கனவில் மிதக்கும் ஆருயிர்த் தோழியை
நினைவில் வந்திட வழிதடம் வகுப்பவள் !
அவள் நினைப்பது நடந்திட வருந்துகிறாள்
நிலையாய் மகிழ்ந்திட மனதை வருடுகிறாள் !
( நளினம் = தாமரை )
பழனி குமார்