''கனமான கணம்''

''கனமான கணம்''
================

ஒவ்வொரு நொடியும்
இத்தனை கனமா ?

நீ

வானம் இருண்டு விழிகள் சுருண்டு
நாளும் முடிந்து சென்றது நியாயம்

ஞாலம் விழித்து காலம்கடந்தும்
நீயும் இல்லாக் காரணம் ஏனோ

நானும் உன்னைத் தேனும் பாலாய்
கவிதையில் கண்டு களித்திருந்'தேனே'

விழிக்கவும் மறந்த விழிகளின் திரையில்
நினைவுகள் கனவாய் வருவதும் ஏனோ

வருவேன் என்பது மெய்நிலைப் பொய்யோ
பொய்தான் உந்தன் வாய்மொழி மெய்யோ

விடிந்தது முடிந்தது இரவும் பகலும்
விடியலும் முடியலும் தொடர்கதை தானோ

ஒவ்வொரு நொடியும்
இத்தனை கனமா

-இது

பித்தனின் கேள்வி
பதில் இனி வருமா ?

எழுதியவர் : தீக்குச்சி நெருப்பு (6-Aug-13, 8:03 am)
பார்வை : 88

மேலே