மனிதா .... நீ .... !!

வீட்டுக்கு மரம் ஒன்று நட்டு
பசுமையை சுவாசிக்க
மனிதா நீ - எழுந்து விடு....!!
புகையில்லா பூலோகம்
புதுமையாய்ப் படைத்திட
மனிதா நீ - புறப்படு..... !!
புவிவெப்பமடையாமல் தடுத்து
சுற்று சூழல் பேண
மனிதா நீ - கிளம்பி விடு ..... !!
இயற்கையோடு இயைந்ததே
உன்னத வாழ்க்கை
மனிதா நீ உணர்ந்து விடு ..... !!
பூமியை வாழவிடு .. பூமியை வாழவிடு ..இன்றேல்
சாமிகூட துணைவராது ....
பூமியை வாழவிடு ...... !!!!