பெயரளவு பெயரனவள்
ஐஸ்
அழகுராணி
பட்டிகாட்டு பெயர்
வைத்தாலும்
ஐஸ்வர்யா
பட்டணத்து பெயர்
வைத்தாலும்
ஏஞ்சலீனா
கடல் தாண்டி பெயர்
வைத்தாலும்
உன்னால் தானடி
அந்த பெயருக்கு அழகு !
பெண்ணிற்கு பெயர்
வைக்கலாம் !
பெண்மைக்கு பெயர்
வைத்தவன் யாரோ ?
பெயருக்கு பெயர் வைக்கவில்லை ..
அழகுக்கு பெயர் வைத்தான் ..
பெயரளவு பேரழகி இல்லை நீ !
என் இதயம் பெயர்த்த பேரழகி !!
உனக்கு அடையாளம் இல்லை
உனக்கு அடைக்கலம் இந்த பெயர் .. .
ஐஸ்வர்யா
என் உயிர் எழுத்து ...