எழுதுகோல் சிந்திய கண்ணீர்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
இன்று அதைத் தேடியே மனம்
ஏங்கித் தவிக்கின்றது உம்
பாடல்களைக் கேளாமல் ...!

வாலி ...புனை பெயர்தான்
ரெங்கராஜனின் இணைப் பெயர்
திரை இசைப் பாடல்களில் மட்டுமே ..!

அணை போட்டுத் தடுத்தாலும்
அணையாக் கவிக் கடல்
கடல் தாண்டியும் ஒலிக்கின்றது ஒலிக்கும்
வான் முட்டும் வரை ...!

இனி வரும் சந்ததியர்களுக்கும்
எதுகை மோனையாய் கவித் தூணாய்
நிறைந்து இருக்கின்றாய் ...!

சங்கம் வைத்து கவி படைத்தாலும்
கரவோசையில் உன்
ஞாபகக் கடலாய் இன்றும்
இசைக்கின்றது எம் செவிகளில் ...!

நீ இல்லாத உலகம்
என் நாவுக்கும் செவிக்கும்
தமிழுக்கும் உம பாடல்கள் ஒலிக்கும்
நினைவு முழுதும்
வாழும் வரைக்கும் ...!

எத்தனை இளமை
முதுமையிலும் உமது
கவிதை படைப்புகளில் ...?

அசையும் ஜீவனிலும் இருப்பாய்
அசையா ஜீவனிலும் உயிர்பிப்பாய்
தமிழின மெங்கும் நிறைந்திருப்பாய்
வெண் தாடிக் கவிஞரே ..!

எழுதியவர் : தயா (6-Aug-13, 10:42 pm)
பார்வை : 56

மேலே