நினைத்தேன் அதிகமாக
அருணன் என்று பெயரிட்டேன்
தகப்பன் வழி பாட்டனை நினைத்து
நாரணன் என்று அழைத்தேன்
தாய் வழி பாட்டனை நினைத்து
சிவா என்று குறிப்பிட்டேன்
முப்பாட்டனை நினைத்து
மூவரும் நினைக்கவில்லை
அக்குழந்தைகளை துளி கூட
நான் ஏன் அவர்களை நினைத்தேன்
இவ்வளவு அதிகமாக