நண்பர்களே 'ஈத்' வாழ்த்துக்கள்..!
எழுத்து வலை தளத்தில்
என் உடன்பிறவா சகோதர்கள்
உவகையுடன் கொண்டாடும்
ஈகை தின பெருநாளில்
ஈடில்லா என் வாழ்த்துக்கள்..!
என் வாழ்த்துக்களை வழங்கி
எனக்காக கேட்பதெல்லாம்
அச்சமின்றி நடைபோட்டு
பணிவோடு நா பேசி
சுயமாய் சிந்தித்து
ஆழமாய் சுவாசித்து
அழகாய் உடை உடுத்தி
நல்ல நட்போடு பழகி
நன்மைகள் பல செய்து
உண்மையாய் உழைத்து
நேர்மையாய் பொருள் ஈட்டி
சிக்கனமாய் செலவு செய்து
சிறிதாய் சற்று சேமித்து
பேதமின்றி பிறர் நேசித்து
முடிவில்லாமல் படித்து
தைரியமாய் இறப்பதற்கு
அருள் புரிவாய் ஆண்டவனே..!