சுதந்திரமே பிறந்து வா.....

சுதந்திரமே பிறந்து வா.....
புதுமையை பழமையோடு கலந்து வா..
பனிமலையில் உருண்டு வா...
உலகம் முழுவதும் பாசத்தை ஊற்ற வா!...

தென்றல் காற்றோடு வா!
தென் இந்தியர் ஒற்றுமையை போற்ற வா...
தும்ப பூவை நுகர்து வா...
துடிக்கும் மனதில் நிறத்தை தூவ வா...

நீரருவியல் நீந்தி வா...
நதிகள் இணைப்பு செயலினை தொடங்க வா..
மலையோடு கடந்து வா..
உதவும் உள்ளமே உயர்ந்தது என்று சொல்லி வா..

இனிய ஓசையை ரசித்து வா
இளைஞர்கள் சாதனைக்கு சான்றாக வா...
வளமான வாழ்வை இயக்க வா...
நல்லரசாகும் திட்டங்கள் வந்தது என்று ஆடி வா..

புதுமையை பழமையோடு கலந்து வா..
சுதந்திரமே பிறந்து வா..... 15/08/2013

எழுதியவர் : இனிய கருப்பு (7-Aug-13, 11:16 pm)
சேர்த்தது : iniya karuppaie
பார்வை : 54

மேலே