விழிநீரை மையாக்கி வடித்தது...!!!!

என் காதல் உச்சமெட்டும் போதும்
உன் பிரிவு என்னை வாட்டும் போதும்,
காதல் வழியும் கவியொன்று
விரலில் வடிக்க என் விழியும் வழியுமடி..

இவளின் நினைவை எண்ணி
இமைகள் மூட மறுக்க,
இடையில் வந்த கனவோ
இதயம் வலிக்கச் செய்ய,
இரவைக் கழித்துப் போக
இவனுக்கு வழிகள் தெரியலையே..

பெண்கள் விழியிரண்டும்
பேசுமா என்றேன்,
வீணனென்று பழிக்கப்பட்டேன்..
விழியாலே கவிதை வடித்தாள்
என் வரிக் கவிதை வீணாகிப் போக..

தனிமையில் என்னுள்
பேசும் போது
தவிப்புகள் தந்தவள் நீதானே,
என் இளமையின் காடுகள்
தண்ணீரில் மிதக்க,
இமைகள் தந்தவளும் நீதானே..

உறக்கம் மறந்த இரு விழியில்
உந்தன் நினைவு கசிந்தொழுக,
உணர்வுகள் வெடிக்க வைத்தாய்
உளறல்கள் நிலைக்க வைத்தாய்..

கடந்த காலம் நிலைத்திருந்தால்
நிகழ்காலம் எதிர்த்திருப்பேன்,
என் எதிர்காலம் நீ இல்லையடி
காலம் கடந்து போனதிங்கே..!!!

எழுதியவர் : பிரதீப் (7-Aug-13, 11:46 pm)
பார்வை : 74

மேலே