காரிருள் திருமணம்

புரோகிதர் (காற்று) திருமணத்திற்கு சம்மதம் கேட்க
பூமியின் உறவினர்களான மரம், செடி, கொடிகள்
தலையசைத்து சம்மதம் சொல்ல........

இருவீட்டார் சேர்ந்து வங்ககடலில் பத்திரிக்கையை
காற்றழுத்த தாழ்வாக பெயரிட ............
வானிற்கு கல்யாணமாம் பூமியுடன்.....
மணமகன்:வானம்
மணமகள்:பூமி

மணமகன் வீடு:
மின்னல் வர்ணகோலம் போட.......
இடி தாளம் இசைக்க..........
வானம்பாடி பறவைகள் ஆடி மகிழ .......
பூமியை கைபிடிக்க காத்திருக்கிறான் மணமகன் .....

மணமகள் வீடு:
தவளைகள் பண் இசைக்க .....
மயில் தோகை விரித்து நடனம் ஆட ........!!!
மணமகன் வருகைக்கு காத்திருக்கிறாள் மணப்பெண்.....!!

நடுவுநிலமையாக நின்று வானின் கருமேக உறவினர்கள் அட்சதை(மழை) தூவ.......!!!
வானின் திருமணம் பூமியுடன் நடைபெறுகிறது நீர்(கடல்)
சாட்சியாகவைத்து ......!!!
வானம் பூமியுடன் அட்சதை உதவியுடன் சங்கமிக்கிறது.......!! பகலவன் உதவியுடன் மணப்பெண் தன் ஆன்மாவாய்( நீராவி) மட்டும் மறுவீடு செல்கிறாள்.....! இருவருக்கும் இயற்கை என்னும் சார்பதிவாளர் முன் தாய் தந்தை இன்றி
திருமணம் பதிவானது....!!!!!!!

எழுதியவர் : ஹரிணி M (7-Aug-13, 11:48 pm)
பார்வை : 174

மேலே