ஈகை பெருநாள்

வந்தது இன்று ஈகை பெருநாள்-தந்தது
நோன்பை கொண்டு நிறைவாய்

பசித்திருந்தோம், விழித்திருந்தோம்
படைத்தவனின் கொள்கை ஏற்று

பர்லான நோன்பு இதை –இன்னும்
நிறைவு செய்தோம் மாண்பு கொண்டு

இறை மறை அருளியது –இந்த
சிறப்பான ரமலான் மாதம்

அருள் அனைத்தும் அள்ளித்தரும்
அழகான ரமலான் மாதம்

ஜக்காத்து கடமை அது – இதை
தவறாமல் கொடுத்து வந்து

வணக்கங்களும் இறைவனுக்கு
வணங்கி நாம் நிறைவு செய்தோம்

எங்கள் நோன்பில் குறை இருப்பின்
இறைவா ! நிறைவாய் ஏற்று

அழகிய உன் திரு பொருத்தத்தை
அள்ளி ஏமக்கு தருவாய் !!

-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (7-Aug-13, 11:52 pm)
பார்வை : 835

மேலே