மூத்தவர்களின் முனகல்கள்........

கோவை நிற கண்களில்
கொந்தளிக்கும் மனதோடு ....
கனவுகள் ஆயிரம் கண்டவள்
கண்ணீரோடு புலம்புகிறாள் ....

கள் வெறியன் கொண்டவன் ஆனான்...
காதல் வாழ்கை கருகி போறிற்று ..

கைக்குழந்தை நான் சுமந்து
இலட்சியத்தை மனதில் ஏந்தி - இனி
எல்லாம் என் மகனே என்றான்.....

போலி மனிதர்கள் மத்தியல்
போக்கிடம் தேடி ஓய்ந்த கால்களுக்கு - என் மகனே
பொறுப்பான பிள்ளையாய் நீ உயர்வாய்
பெற்றவளை கையில் தாங்குவாய் என்றேன் ....

படிகள் பல ஏறி
பாத்திரங்கள் தேய்தேன் - என் மகனே
பட்டங்கள் நீ பெற்று
பாவியனை பாசமாய்
பார்ப்பாய் என்றேன் ...

கல்லுரி வாசலில் கல்விக்கு சென்று
காதல் வாங்கி வந்த போதும் - என் மகனே
காண கண்டேன் என் பேர குழந்தை
காலால் முட்டி விளையாடுவதை .....

வறுமை என் இளமையில் என்றாலும்
பொறுமை நான் காத்ததால்
பெருமை என் பிள்ளையால்- என் மகனே
சொல்லி பரவசமடைந்தேன் ...

மனை பார்த்து நல்ல
மரம் பார்த்து சாத்திரம் பார்த்து- நல்ல
சகுனம் பார்த்து ...
புது வீடு குடியரிய - என் மகனே..

கோலம் கெட்டு போனதால்
அணைத்த கைகள்
அசைவின்றி ஆனதால்
எனக்காகவா காட்டினாய் - இல்லம்
முதியோர் இல்லம்....

ஏக்கம் எனக்கு தான் பரவா இல்லை ..
ஏந்தவும் வழிஇல்லை-
இனி தேவையும் இல்லை - என் மகனே
திரும்பி பார் - உன் மகன்
பார்க்கிறான்

உலகம் உருண்டைதான் ... சிந்திப்போம் நண்பா.....

எழுதியவர் : இனிய karuppu (7-Aug-13, 11:53 pm)
பார்வை : 76

மேலே