குறள் வழி இறை துதி
மொழியின் உயிர்
அகரம்
உலக உயிரின்
உயிரோ... நீ
..........................
உன்னடி படியாது
பன்னூல் பயின்று
என்ன பயன் ....
...................................
மலரில் உயிர் பதிக்கும்
உன்வழி தொடர்கையிலே
உலகில் வேர் பதிக்கும்
வீழா வாழ்வது
.......................................
ஆழிப் பேரலையாய்
அணிவகுக்கும்
பிறப்பலைக்குள்
மூழ்கி தவிக்கும்
உன்னடி சேரா
உயிர்கள் அனைத்தும்
காக்கும் துடுப்புகளாய்
உன்
கருணை பாதங்கள்
......................................................