அன்றும் .... இன்றும்..... !!!

அம்புலி காட்டி அம்மா ஊட்டினாள் சோறு அன்று !
டிவி போட்டு சும்மா சாப்பிடு என்பாள் இன்று .... !

அடுக்களையே கதியென்றிருப்பர் பெண்கள் அன்று !
விளம்பர வேளையே வேலை நேரம் இன்று .....!!

பேப்பரும் கையுமாய் செய்தி படிப்பார் அப்பா அன்று
ரிமோட்டில் சானல் மாற்றி நியூஸ் பார்ப்பார் இன்று

சினிமா சினிமாவென நச்சரிப்பாள் மனைவி அன்று
சீரியல் இருக்க சினிமா ஏன் என்பாள் இன்று ....!!

குட்டிகள் அடம்பிடித்தால் அடங்காது அன்று !
சுட்டிடிவி போட்டாலே பெட்டிப்பாம்பாகும் இன்று !!

கில்லி கோலி ஆடி பட்டம் விடுவர் சிறுவர் அன்று !
கார்ட்டூன் கண்டே காலம் கழிப்பர் இன்று ...!!

சீட்டாடி களித்திருப்பார் காளையர் அன்று !
கிரிக்கெட் பார்த்தே பூரிப்பர் இன்று... !!

பாண்டி ஆடி நேரம் போக்குவர் கன்னியர் அன்று !
பாட்டு கேட்டே பொழுதைத் தொலைப்பர் இன்று !!

திண்ணையில் வெட்டிக்கதை பேசுவார் தாத்தா அன்று !
பேரப்பிள்ளைகளுடன் காமெடி பார்ப்பார் இன்று ...!!

நடந்தே தினம் பாட்டிசெல்வாள் கோயில் அன்று !
நித்தமும் ஆலய தரிசனம் டிவியில் இன்று ...!!

கூட்டிக் கழித்துப் பார்த்தால்
தொலைக்காட்சி
தொல்லைக்காட்சி அல்ல ...!!
தொல்லைகளைக் கூட
தொலைத்து விட்ட காட்சியே ... !!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Aug-13, 4:53 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 225

மேலே