காதல் தற்கொலை
காதலை தேடினேன்
காதலியாய் நீ வந்தாய்
என் வழி மறந்து விழி மூடி
உன் வழி வந்தேன்
கரம்கோர்த்து கைபிடித்து
பயணித்தேன் உன்னோடு
செல்லும் வழி அறியவில்லை
வழித்துணையாய் நீ வந்ததால்....
இன்று கண் திறந்து
பார்கிறேன் கடந்து வந்த
பாதைகள் தெரியவில்லை
நீ என்னோடு இல்லை என்பதை
மட்டும் உணர்கிறேன்
என் காதோடு கதைபேசிய உன்
உதடுகளை காணவில்லை
என் சுவாசம் தீண்டிய உன்
சுவாச காற்றும் அருகில் இல்லை
என் நிழல் சூழ்ந்த உன்
நிழல் காணவில்லை
என் விரல் கோர்த்த உன்
விரல்கள் காணவில்லை
ஏனோ தடுமாறுகிறேன்
நீ பிரிந்து சென்றுவிட்டாய் என
ஆனாலும் நண்ப மறுக்கிறது மனது....
காதல் சுவாசம் தந்து
என்னில் சிலநாள் வசித்துவிட்டு போனாய்
வசந்தமிழந்து போனது என் வாழ்நாள்.....
காதல் வந்த காரணம் அறியும் முன்பே
காதல் தோல்விதனை அறிய வைத்தாய்
காரணம் கேட்டால் யாரென எனை கேக்கிறாய்....
பிரியும் வரை தெரியவில்லை
நீ பிரிந்து செல்வாய் என
அறிந்தும் அறியாமலும் போன
என் காதல் நாட்களை புரிந்தும் புரியாமலும்
தனிமையில் புலம்பி நிற்கிறேன்....
காதல் சுகத்தில் திளைத்தவன்
காதல் வலியை ஏற்க்க மறுக்கிறேன்
இரண்டும் உன்னிடமே கற்றுக்கொண்டேன்...
மரணம் கூட வலியில்லை தினம்
உன்னால் மரணித்து பிறக்க கற்றுக்கொண்டேன்
தினம் உன் நினைவால்
தற்கொலை முயற்சி என்னில்
எப்படி நீ அறிவாய் தினம்
என் மனம் தற்கொலை செய்து
மரணவாசல் சென்றுவிட்டு மீண்டு வருவதை....
என்மீது காதல் வரவில்லை என்று
சொல்லிருக்கலாம்
ஒருதலை ராகமாய்
ஒரு வரி கவிதையாய்
ஒரு கை ஓசையாய்
உன் புகழ் பாடி உன்
நிழல்தனை நிஜமாக்கி வாழ்ந்திருப்பேன்.....
ஏன் என் காதலை ஏற்றாய்
இன்று எனை ஏற்க்க மறுக்கிறாய்
தனிமை எனை வாட்ட
தள்ளாடி விழுகிறேன் மரண பள்ளத்தில்
கை கொடுத்து தூக்க வேண்டாம்
காரணம் மட்டும் சொல்லிவிடு
மறுபிறவியில் உனக்கு பிடித்தவனாய் பிறப்பேன்
இன்று மகிழ்ச்சியோடு மரணிப்பேன்
காரணம் மட்டும் சொல்லிவிடு பெண்ணே...