உறவு தூங்கும் நேரம்
உறவு தூங்கும் நேரம் –இந்த
உரிமை தூங்கிடாது
இரவு தூங்கினாலும் –இந்த
நினைவு தூங்கிடாது
இது ஒரு கனவளை – இனி
உணர்வுகள் இதன் சிறை
நான்கு சொந்தம் வேணும் – இனி
உன்னை தாங்கி தூக்கவே
காணும் காட்சி யாவும் இங்கு
கானல் நீர் அலை
வானமும் இந்த பூமியும் –அந்த
இறைவன் படைப்பிது
நாம் வாழும் நாள் கூட –அந்த
படைப்பின் கணக்கிது
வாழும் நாளில் நாம் செய்யும்
நல்ல அமல்கள் ஏது
வாழ்வு உன்னை காட்டிடும்
நடந்த செயல் இது
நான் இனி நீ நாள் தரும் விதி
வாழ்வோம் நாமும் அர்த்தமாக
உறவு தூங்கும் நேரம் –இனி
உரிமை தூங்கிடாது ..................
ஸ்ரீவை.காதர்.