ஆலய தரிசனங்கள்
தாழ்ந்து நிற்கும் மனம்
ஒவ்வொரு
ஆலய படிக்கட்டுகளிலும்
....................................................................
உயர்ந்த ஆலயத்தின்
கலசங்களும்
மினாராக்களும்
மீண்டும் மீண்டும்
நினைவுறுத்துகின்றன
மிகவும் தாழ்ந்தவன்
நான் என்பதை
.........................................................................
மறந்திருந்த மனதின்
மூலைகளில்
மெல்ல பீறிட
துவங்குகின்றன
மரணத்தின் கவலைகள்
ஆலய தரிசனங்களில்
....................................................................
வேண்டுதல்களின் போது
கட்டாயம் வந்து செல்லும்
எதிர்கொண்ட
யாசகனின் முகம்
......................................................................
விழிக்குளங்களுக்குள்
கலங்கி விசும்பும் மனது
சலனமற்ற ஓடையாய்
தூய்மையாகிறது
வேண்டல்களுக்கு பின்னால்
...............................................................
பாவங்களையும்
கவலைகளையும்
கொட்டிவிட்டு
நம்பிக்கைகளை
சுமந்தே திரும்புகின்றன
மனசு
ஒவ்வொரு முறையும்
.............................................................................
ஆலயங்களின் சுவர்களில்
கேட்பாரற்று
கொட்டிக்கிடக்கின்றன
யார் யாரோ
விட்டுச்சென்ற
பாவப்பொதிகள் ..........
.......................................................................
உச்சரிக்கப்படும்
பொருளுணரா மந்திரங்களுடனே
வெளிப்பட்டு கொண்டிருக்கும்
இதயம் ஒலிக்கும்
நன்றி நவிழ்வுகள்.....
......................................................................
கண்மூடிய பிரார்த்தனையில்
கழுவப்படுகின்றன
கறைபடிந்த
இதயங்கள் ...
................................................................
கடலுக்கடியில்
நின்றுவிடும்
இரைச்சல்கள் போலவே
இறை மடியில்
நம் செவித்துவாரங்கள் ....
..............................................................
ஆலயங்களில்
சுத்தமாகும் மனதை ஏனோ
ஆலயங்களின் பெயரால்
அழுக்காக்கி விடுகின்றன
அரசியல் கழிவுகள் ............
.....................................................