அமலா VS விமலா ஜோக்ஸ் 08
அமலா : டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப்போர்த்திக்கிட்டு தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?
விமலா : தெரியாதே!
அமலா : அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!
********************************
அமலா : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!
விமலா : அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.
********************************
அமலா : என் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமான நாள்ல இருந்து தினமும் என்கூட சண்டை போடுறா.....
விமலா : ஏன் மாப்பிள்ளை பிடிக்கலைன்னா....?
அமலா : அப்படியெல்லாம் இல்ல. மாமியார் கூட சண்டை போடுறதுக்காகப் பயிற்சி எடுக்குறா.
அமலா : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
விமலா : ஏன்னா அதைத் தான் தோய்க்கிறாங்களே. அதுதான்
************************************
அமலா : லவ் லெட்டரை என் தங்கச்சிகிட்ட குடுத்துவிட்டது தப்பாப்போச்சு.
விமலா : ஏன்?
அமலா : என் காதலரோடு ஊரைவிட்டு ஓடிட்டா.
அமலா : உடல் உறுப்புகளைப் பாதுகாக்குறதுல என் கணவருக்கு நிகர் அவரே தான்.
விமலா : எப்படி?
அமலா : தேஞ்சு போயிரும்னு சொல்லி பல்லே தேய்க்க மாட்டாருன்னா பாத்துக்கோயேன்.
நன்றி ;தமிழ் களஞ்சியம்